கொழுப்பைக் குறைக்கும்… நம்ம ஊரு நிலக்கடலை..!

நிலக்கடலை… கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன. நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம்.

மறந்துபோன நம் பாரம்பர்ய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், நிலக்கடலை குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலக்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ உண்ணும் வழக்கம் உள்ளது. கடலை எண்ணெய் என்ற பெயரில் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்துகிறோம். நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ்-ம் கூட. இதன் மகிமை தெரிந்தால்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் உணவுப் பட்டியலில்  இடம்பிடித்துள்ளது. ஆனால், அதிகமாக உற்பத்தியாகும் இந்தியாவில், மலிவான விலையில் கிடைக்கும் இதன் மகிமை தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகிறோம்.

சத்துகள்
நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதில் முக்கியமான சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

தசைகளை வலிமையாக்கும்

நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.

கொழுப்பைக் குறைக்கும்

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் எல்.டி.எல். (Low-density lipoprotei) எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் எச்.டி.எல். (High-density lipoprotein – HDL) கொழுப்பை அதிகப்படுத்துகிறது.

மன அழுத்தம் போக்கும்

நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.

நினைவாற்றல்அதிகரிக்கும்

இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

இதயம் காக்கும்

நிலக்கடலையைlத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாள்கள் நிலக்கடலையைச் சாப்பிட்டு வருவது இதய நோய்களைத் தடுக்க உதவும்.

புரோட்டின் நிறைந்தது

கடலையில் அதிகளவு புரோட்டின் உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி நிறைந்துள்ளது. அதாவது, இறைச்சி உணவை விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலை சாப்பிடலாம்.

இளமை பராமரிக்கும்

இதிலுள்ள சத்துகள் முதுமையைத் தள்ளிப்போடுவதுடன், இளமையைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.

கருப்பைக் கோளாறுகள் நீங்கும்

நிலக்கடலையில் உள்ள சத்துகள் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. குறிப்பாக நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது. ஆகவே பெண்கள் தினமும் 400 கிராம் என்ற அளவில் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் மார்பகக்கட்டி ஏற்படாமல் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

பித்தப்பை கல் கரைக்கும்

நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

எலும்புக்கு வலிமை தரும்

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

ஆவாரம்பூ குடிநீர்…

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு.

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

சுக்கில் இருக்கும் சூட்சுமம் !!!

மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு’’ முதலிடம் பெறுகிறது.

சுக்கிலிருக்குது சூட்சுமம்’’ என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை,முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில்சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ‘‘சுக்கு நீர்’’ தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்.

பொதுப்பயன்கள்:

பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக்குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

மருத்துவப் பயன்கள்:

1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி,சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால்,அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால்,அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர,தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால்,மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம்மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

மூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்…

நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

மூளை:

  • கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
  • தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.
  • குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
  • வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.
  • தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
  • இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.
  • பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

கண்கள்:

  • பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
  • தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
  • அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
  • வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.
  • தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.
  • தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

பற்கள்:

  • மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
  • கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
  • பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

பனங்கற்கண்டில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி அறிவோம்…

பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.

முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.

இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.