2.0 படம் பற்றிய கருத்து..!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்து மிக பெரிய வெற்றியை கண்ட படம் ‘எந்திரன்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது ‘2.0’. படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

எந்திரன்’ படத்தில், ஒரு ரஜினி விஞ்ஞானியாகவும், அவர் உருவாக்கிய ரோபோ இன்னொரு ரஜினியாகவும் நடித்திருப்பார். . மனித உணர்ச்சிகளை தெரிந்து கொண்ட ரோபோ ரஜினி, ஹீரோயினான ஐஸ்வர்யா ராயைக் காதலிப்பதுதான் படத்தின் சுவாரஸ்யம்.

தற்பொழுது லீக்கான ‘2.0’ படத்தின் போட்டோவைப் பார்க்கும்போது, எமி ஜாக்சனும் ஒரு ரோபோவாக நடித்திருப்பதாக தோன்றுகிறது. அப்படியானால், ரோபோவுக்கும் ரோபோவுக்கும் இடையிலான காதல் தான் படத்தின் கதையாக இருக்கும் என்று பலருக்கும் தோன்றுகிறது.

சிலர் எமி ஜாக்சன் ரோபவாக இருந்து ரஜினியை காதலிக்கலாம் என்றும் கூறுகின்றனர் எப்படியோ சங்கர் படம் என்றாலே சரியாக ஓடிவிடும் ஆனால் எதிர் பார்பிற்கு தகுந்த மாதிரி 2.0 எப்படி இருக்கும் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் .

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!