கவனிக்கவும் முக்கியமான ஒன்று கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் வலி வரக் காரணங்கள்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான். அதற்காக சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலான பிரசவம் நடைபெறப் போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற்படும்.

கர்ப்பத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான வலி அடிவயிற்றில் ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிகளை விட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடிவயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணத்தை பார்க்கலாம்.

காரணம் -1

கர்ப்பத்தின் 2 முதல் 6 வாரங்களில், கருவானது உருவாக ஆரம்பிக்கும். அவ்வாறு அவை உருவாகும் போது, ஒருவிதமான வலி, அடிவயிற்றில் ஏற்படும். சொல்லப்போனால், இந்த காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஏற்படப் போவது போன்று உணர்வு இருக்கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில் வலி ஏற்பட்டால், கரு உருவாக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

காரணம் -2

கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய ஹார்மோன் மாற்றங்களாலும், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு ஏற்படும்.

காரணம்-3

சில சமயங்களில் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், பெல்லோப்பியன் குழாய்களில் இருந்தால், அது வளரும் போது மிகவும் கடுமையான வலியானது ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை அகற்றிவிட வேண்டும்.
இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும். இந்த மாதிரியான வலி, 4-6 வாரங்களில் ஏற்படாது. ஆனால் அதற்கு பின்னர் வலியானது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். ஏனெனில் கரு வளரும் போது, குழாயும் விரிவடைந்து கடும் வலி ஏற்படும்.

காரணம்-4

கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். அதிலும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்து, வலி தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

காரணம்-5

பொதுவாகவே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் பிரசவ வலி ஏற்படலாம். அதிலும் 7 அல்லது 8 ஆவது மாதத்தில், இந்த மாதிரியான வலி ஏற்பட்டால், அது குறைபிரவத்திற்கான அறிகுறியாக இருக்கும். இவையே கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் வலிக்கான காரணங்கள்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!