அக்.13ம் தேதி-இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.13ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை முழுமையாக முடிவடையததால் வரும் 13ம் தேதி மாலை 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகின்றனர்.

இரட்டை இலை சின்னம் விசாரணை நடைபெற்று வருவதால் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பில் டெல்லி போலீஸ், துணைராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சி.எஸ். வைத்தியநாதன், விஜயகுமார், குரு கிருஷணகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடி வருகின்றனர். இதைபோல் டி.டி.வி. தினகரன் தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஹன்ஸாரியா, சேதுராமன் ஆகியோர் ஆஜராகி வாதாடி வருகின்றனர்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!