இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்வர் OPS திறந்து வைத்தார்.!

சென்னை: இன்று சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பி.எஸ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சிவாஜி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான திரையுலகத்தினர் பங்கேற்றனர். சிவாஜிக்கு ரூ.2.80 கோடியில் சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, கமல்,ரஜினி, நாசர், கார்த்தி, விஷால் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். சிவாஜி உருவப்படத்திற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த் சிவாஜி மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்ட பி்ன்னர் சற்று தாமதமாக வருகை தந்தார். சிவாஜி சிலையின் பீடத்தில் கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளது. சிலைக்கு கீழ் கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்ட பழைய கல்வெட்டு வைக்கப்படவில்லை. பழைய கல்வெட்டுக்கு பதில் புதிய கல்வெட்டு சிவாஜியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!