3 ஆண்டுகல் சிறை தண்டனை-மொபைலில் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால்.!

புதுடில்லி: மூன்று ஆண்டுகல் சிறை தண்டனை விதிக்கப்படும், மொபைல் போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ என்னும் சர்வதேச மொபைல் போன் அடையாள எண்ணை திருத்துபவர்களுக்கு, என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனிப்பட்ட, 15 இலக்க அடையாள எண் தரப்பட்டுள்ளது. மொபைல் போன் தொலைந்து போனால், அதை கண்டுபிடிக்கவும் உடனடியாக அதன் இயக்கத்தை நிறுத்துவதற்கும், இந்த எண் உதவுகிறது.

புதிதாக மொபைல் போன் வாங்குவோர் மொபைல் போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சமீபகாலமாக மொபைல் போன் திருட்டில் ஈடுபடுபவர்கள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அந்த எண்ணில் திருத்தம் செய்து குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர். இது சட்டப்படி குற்றம்.

கடந்த ஆக, 25ல், இதுகுறித்த அறிவிப்புகளை மத்திய தகவல் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. அதில், மொபைல் போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண்ணை அழிப்பது அல்லது வேண்டும் என்றே திருத்தம் செய்வது உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது, போலீஸ் அல்லது மத்திய மற்றும் மாநில தொலைத் தொடர்பு துறையால் வழக்கு தொடரப்படும்.

இந்த வழக்குகளில் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், எனக் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!