அக். 1-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை: அக்டோபர் 1-ம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.

சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி மரணம் அடைந்தார்.

அதன் பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. அப்போது 2002-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி கொடுத்தார்.பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அப்படியே நின்று போனது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ம் தேதி சட்டசபையில் 110-விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ‘சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்றார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது.

தற்போது அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இதை தொடர்ந்து சிவாஜி கணேசன் பிறந்தநாளான வருகின்ற அக்டடோபர் மாதம் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைக்கவுள்ளார். மணி மண்டபத்தில் சிவாஜி கணேசன் வாழக்கை வரலாறு , புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி நடைபெறுகிறது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!