இனி நாடு முழுவதும் “24-மணி நேரமும் தடையில்லா மின் வினியோகம்” – ஒரு புதிய திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார்.!

இனி நாடு முழுவதும் “24-மணி நேரமும் தடையில்லா மின் வினியோகம்” – ஒரு புதிய திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார். ”இதன் மூலம், 2019ல், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தடையில்லா, மின் வினியோகம் கிடைக்கபெறும்,” என, மத்திய அமைச்சர், ஆர்.கே.சிங் கூறினார்.

இது பற்றி, மத்திய மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங் மேலும் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான, பா.ஜ.கா, ஆட்சியில், நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, நாளை, “24-மணி நேரமும் மின் வினியோகம்” என்ற புதிய திட்டத்தை துவக்கி வைக்கவுள்ளார்.வருகின்ற, 2019ல், நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும், மின் வசதி ஏற்படுத்தி தருவதே, இத்திட்டத்தின் இலக்கு. அனைத்து கிராமங்களிலும், மின் இணைப்பு கொடுப்பதற்காக, தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும், 24 மணி நேரமும், தடையில்லா மின்சாரம் கிடைக்க வழி வகை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!