பெங்களூருவில் விஷால் பேச்சு – தண்ணீர் கேட்க கூடாது என சொல்ல யாருக்கும் உரிமையில்லை.!

தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலருமான விஷால், பெங்களூருவில் நடந்த, ‘ரகுவீரா’ கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நேற்று பங்கேற்றார். போக்குவரத்து நெரிசலில் சிக்கிய விஷால், விழாவில் தாமதமாக பங்கேற்றார்.

இதில்  விஷால் பேசியதாவது: கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவானாலும், தமிழில் பேசுவதில் பெருமை அடைகிறேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது, தமிழர்களுடைய உரிமை. நாம் அனைவரும் இந்தியர்கள்.

மாநில பேதம் பார்ப்பது தவறு. தமிழகத்தில், ஏராளமான கன்னடர்கள் வாழ்கின்றனர். அதேபோல், கர்நாடகாவிலும் எண்ணற்ற தமிழர்கள் வாழ்கின்றனர். அனைவருக்கும் பாதுகாப்பு தருவது, அந்த மாநில மக்களின் கடமை.

கர்நாடகாவுக்கு மட்டுமே தண்ணீர் கிடையாது. எங்களுக்கும் உரிமை இருப்பதாலேயே கேட்கிறோம். ‘தண்ணீர் கேட்க கூடாது’ என சொல்ல, யாருக்கும் உரிமையில்லை. கர்நாடகாவிலிருந்து யார் வந்து, தமிழகத்தில் படம் எடுத்தாலும், தயாரிப்பாளர் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேசிய கன்னட அமைப்பினர், ‘தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என, நாங்கள் கூறவில்லை. எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று தான் கூறுகிறோம்’ என்றனர்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!