ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்- நம்ம அரசு மருத்துவமனையில் விரைவில்

சென்னை, அப்பல்லோ மருத்துவமனை, ‘ஏர் ஆம்புலன்ஸ்’ எனப்படும், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளது.

இதன் துவக்க நிழ்ச்சி, சென்னை, லயோலா கல்லுாரியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழக சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தானம் பெற்ற உடல் உறுப்புகளை, பிற பகுதிகளில் இருந்து எடுத்து வர, விமான சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில், நோயாளிகளை கையாளும் வகையில், வாடகை முறையில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை துவக்க, ஓராண்டாக பேச்சு நடந்து வருகிறது.

இதற்காக, மாவட்டம் தோறும், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இறங்குவதற்கான இடங்களை கண்டறியும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பணிகள் முடிந்ததும், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை, அரசு துவங்கும். அப்பல்லோ சார்பில் துவங்கப்பட்டுள்ள, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை, பேரிடர் காலங்களில், அரசு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!