மோடியின் வருகை பற்றி டிரம்ப் பெருமை..!


மோடியின் வருகை அமெரிக்காவிற்கு பெருமை சேர்க்கிறது. பொருளாதாரத்தில் முக்கிய பணி செய்து வெற்றி கண்டவர் மோடி. இந்தியா ராணுவ உபகரணங்கள் வாங்கியதற்கு நன்றி. இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், எனக்கு அளித்த வரவேற்பு, 125 கோடி இந்தியர்களுக்கும் அளித்த வரவேற்பு’ எனக் கூறினார்.
இச்சந்திப்பில் இரு தலைவர்களும் அதிக நேரம் பேச உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பயங்கரவாதம், ராணுவ உபகரணங்கள் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘விசா’ பிரச்னையை, பிரதமர் மோடி முன்னிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை வெள்ளை மாளிகையில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கில் துவங்கியது. அதிபர் டிரம்ப் சந்திப்பு சுமூகமாக இருந்தது. இந்த சந்திப்பு அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கு பெரும் நன்மையை கொண்டு வந்து சேர்க்கும்.

தீவிரவாத ஓழிப்பு, என்.எஸ்.ஜி., ஜ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இருதலைவர்களும் வர்த்தகம் குறித்தும் பேசினர். கூட்டத்தில் பதான் கோட் தாக்குதலில் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி பாக்., தனது நாட்டில் தீவிரவாதம் வளர்ப்பதை நாம் அனுமதிக்க கூடாது என பேசினார். .

மேலும் மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல், பதான் கோட் தாக்குதல், உள்ளிட்ட எல்லை தாண்டிய தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஓப்படைக்க பாக்.,கிற்கு கோரும் விவகாரமும் விவாதிக்கப்பட்டது. இந்தியா வர டிரம்பிற்கு மோடி விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார். என்று கூறப்படுகிறது ..!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!