திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் ஆணுறுப்பை வெட்டிய பெண் .!


டெல்லியின் மங்கோல்புரியை சேர்ந்த இளம்பெண்ணும் ரோட்டுக் கடை நடத்தி வரும் ரவி என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். கடந்த புதன்கிழமையன்று ரவி தனது காதலியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் திருமண பேச்சை எடுத்துள்ளார். அதற்கு தன்னுடைய வீட்டார் திருமணத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை என்று ரவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் அவர்கள் சம்மதம் வேண்டாம் நாம் தானே காதலித்தோம், நாமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

ரவி இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவரை தனது வீட்டில் உள்ள குளியலறைக்குள் தள்ளி ஆடைகளைக் கலைந்து உடலுறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ரவி ஒப்பு கொள்ளாததால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண் ரவியின் ஆணுறுப்பை வெட்டியுள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி இந்த சம்பவத்தையடுத்து அலறித் துடித்துக் கொண்டு ஓடியுள்ளார், இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட இளைஞன் ரவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!