இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு ..!


பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு, இன்று செல்கிறார். அதிபர் டிரம்ப்பை, நாளை சந்தித்து பேசுகிறார். மோடி யின் பயணம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

உலகின் நல்ல சக்தி, இந்தியா என்பதை, அதிபர் டிரம்ப் உணர்ந்துள்ளார். இந்திய – அமெரிக்க உறவில், டிரம்ப் அலட்சியம் காட்டுவதாக கூறப்படும் தகவலில் சிறிதும் உண்மையில்லை.
இந்தியாவுடனான உறவுக்கு, டிரம்ப் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அதிபராக டிரம்ப் பதவியேற்று, ஆறு மாதம்தான் முடிந்துள்ளது. அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடி இடையே, இரண்டு முறை, டெலிபோன் பேச்சு, சிறப்பாக நடந்துள்ளது

அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, ராணுவ ஒத்து ழைப்பு, வர்த்தக உறவு, அணுசக்தி ஒப்பந்தம் உட்பட பல விவகாரங்கள் விவாதிக்கப்படும்.

இந்தியாவின் எரிசக்திக்கு பங்களிப்பு அளிக்கும் வகையில், அணு மின் நிலையங்கள் அமைக்க விரும்புகிறோம். அணுசக்தி துறை ஒத்துழைப்பு மூலம், இந்தியாவின் எரிசக்தி திறன் அதிகரிக்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், அமெரிக்க மக்களுக்கான வர்த்த கவாய்ப்புகளும் உயரும். இதனால், அணுசக்தி ஒப்பந்தத்தை, முன்னெடுத்து செல்ல விரும்பு கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மோடியின் வருகை குறித்து, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் நவ்தேஜ் சர்னா கூறியதாவது.திங்களன்று மதியம், வெள்ளை மாளிகைக்கு, பிரதமர் மோடி வருகிறார்.
அமெரிக்க அதிபருடன், பல மணி நேரம் பேச்சு நடத்துகிறார். இரவு உணவு டன், பேச்சு முடிகிறது. அதிபராக பதவியேற்றபின், வெள்ளை மாளிகை யில், முதல் முறையாக, மோடிக்குதான், டிரம்ப் விருந்தளிக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக் கப்படும்’ என, வெள்ளை மாளிகை கூறியுள்ளது.இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில், திங்களன்று இரவு, விருந்து அளிக்கப்படுகிறது.

வெளி நாட்டு தலைவர், அதிபர் டிரம்ப், இரவு விருந்து அளிப்பது, இதுவே முதல் முறை, மோடி வருகைக் கான ஏற்பாடுகள், இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டன. இந்த பயணம் சிறந்ததாக அமையும் வகையில், மோடிக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க நேரப்படி, 26ம் தேதி, மாலை 3:30 மணிக்கு, அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்திக்கி றார். இருதரப்பு பேச்சுக்கு பின், இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். தனித்தனி அறிக்கையும் வெளியிட உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, ‘எச்1 பி’ விசா குறித்து, விவாதிக்கப்பட மாட்டாது என செய்தி வெளியாகியுள்ளது.

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!