தனது மகன்களுடன் நேரம் செலவழித்த இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றி..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தானுடனான இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும் எதிரியையும் தட்டிக் கொடுக்கும் உணர்வே பரவலாக காணப்பட்டது.

இந்த நிலையில் லண்டனில் தனது மகன்களுடன் நேரம் செலவழித்த இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி ட்விட்டரில் பதிவு ஒன்றையிட்டுள்ளார்.

என் குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட சிறந்த வீரர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடன் நேரம் செலவிட்டதால் எனது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!