குறைந்தபட்ச ஆதார விலையுடன் உற்பத்தி விவசாயிகளுக்கு உரிமை வழங்க வேண்டும்-சீதாராம் யெச்சூரி

ட்விட்டர் பக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி துயரத்தால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். போராட்டம் மூலம் தங்களது நிலைமையை உணர்த்த முற்படுகின்றனர்.

ஆனால் முயற்சிக்கும் விவசாயிகளை மத்திய அரசு அடக்க முயற்சிக்கிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்காமல் தீவிர வாதிகளைப் போல நடத்துகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட விவசாயி கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகள் மனநிலையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஆதார விலையுடன், உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை விற்க விவசாயிகளுக்கு உரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார் .

இதை சீதாராம் யெச்சூரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதமும் அனுப்பி வைத்துள்ளார். அதில் விரைவில் தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். எப்படியோ விவசாயிகள் கவலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் போதும் ..!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!