பெண்களே இப்படி செய்யாதிர்கள் ஆண்களுக்கு பிடிக்காது..!


ஆண்கள் தான் அதிகமாக பெண்களை காயப்படுத்தி பேசுகின்றார்கள் என ஒரு வதந்தி உள்ளது . ஆனால் பெண்களும் , ஆண்களை அதிகமாக காயபடுத்துகின்றன்ர் .பெண்களே புரிந்துகொள்ளுங்கள் இப்படி ஒருசில வார்த்தைகளை மட்டும் தவிர்க்க வேண்டும்.நம் அன்புக்கு உரியவரிடம் பேசக் கூடிய பல வார்த்தைகள், அவர்களை எவ்வளவு பாதிக்கும் என்று யோசித்து பேசுவது மிகவும் அவசியம்.. அது பற்றி பார்க்கலாம்

மற்ற ஆண்கள் உடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டாம் ..!

திருமணத்திற்கு பின் தனது துணையிடம் உங்களை திருமணம் செய்ததற்கு, அவரை செய்திருக்கலாம் என்று ஒருபோதும் கூறக் கூடாது. ஏனெனில் அது ஆணின் தன்னம்பிக்கையை வேரோடு அழித்துவிடும்.

செய்த தவறை குத்திக்காட்ட வேண்டாம் ..!

ஆண்கள் தவறு செய்தால் அதை கேட்கலாம். ஆனால் அதற்கு நீ எப்போதுமே இப்படி தான் என்று குத்திக்காட்டி பேசுவதை தவிர்க்க வேண்டும்

அன்பாக பேசுங்கள் ..!

ஆண் செக்ஸ்க்கு நெருங்கும் பொது உங்களால் முடியவில்லை என்றால் , இன்றைக்கு வேண்டாம் என்று முகத்தில் அறைந்தது போல கூறாமல், அன்பாக ஒரு முத்தம் கொடுத்து இன்று ஓய்வு வேண்டும் என்று கூறுவது சிறந்தது

வார்த்தையால் புண்படுத்த வேண்டாம் .!

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை வைத்து, இவ்வளவு கஷ்டங்களும் உங்களால் தான் வந்தது என்று கூறாமல், அந்த தருணத்தில் மகிழ்ச்சியான வார்த்தைகளை பேசுவது நல்லது.

தேவையற்ற கோவம் வேண்டாம் ..!

சில நேரங்களில் அதிக வேலை காரணமாக பெண்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தால், அதற்காக அவர்களிடம் கோபம் கொள்ளாமல் அன்பாக புரிய வைப்பது நல்லது

பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்..!

ஆண்களின் உண்மையான பலத்தை தெரிந்து அதை வைத்து பாராட்ட வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் எப்போதும் உங்கள் அப்பா, அம்மா போல தானே என்று குடும்பத்தயே குறை சொல்லக் கூடாது

கொச்சையாக பேசவேண்டாம் ..!

குடும்பத்தில் ஏதாவது காரணத்தால் , விவாதம் எனில் கொச்சையான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதனால் உங்கள் மீதான மரியாதை குறைந்துவிடும்

உண்மையான அன்பை புரிந்துகொள்ளுங்கள் ..!

ஆண்கள், உன்னை அதிகமாக விரும்புகிறேன் என்று கூறும் போது, அதை ஏற்றுக் கொள்ளாமல், இல்லை அதெல்லாம் பொய் என்று மறுத்து, காயபடுத்துகின்றன்ர்.உண்மையாக இப்படி இருக்கும் ஆண்களுக்கு மனம் காயப்படும்..

பெண்கள் செய்யும் வேலையை ஆண்கள் செய்ய முன் வரும் போது, நீங்கள் அதை செய்தால், சரியாக இருக்காது என்று புறக்கணிக்காமல், அவரின் அன்பை புரிந்துக் கொள்ள வேண்டும்

எதிர்மறையாக பேச வேண்டாம் ..!

ஆண்கள் வேலை கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கும் போது, எப்போ வேலை கிடைக்குறது என்று எதிர்மறையாக கூறாமல், கண்டிப்பாக வேலை கிடைத்து விடும் என்று நேர்மறையாக பேச வேண்டும்

சொந்தங்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் ..!

ஆண்களின் சொந்த உறவுகள் செய்யும் செயல்களை சுட்டிக் காட்டி அவர்கள் மீது அதிக குறைகளை சொல்லக் கூடாது. ஏனெனில் அதனால் அந்த ஆணுக்கும் உங்களுக்கும் அன்பில் நெருக்கம் குறைந்துவிடும்.

அவர் செய்வதை ரசியுங்கள்..!

ஆண்கள் மீசை, தாடி, புதிய சட்டை போன்ற விடயத்தில் புதிய ஸ்டைல் செய்தால், அதை பார்த்து என்ன டேஸ்ட் பிடிக்கவே இல்லை என்று கூறுவதை விட, இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறலாம்..!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!