பாகுபலி யை விட சாதனை படைத்த தங்கல் ..!

சீனர்களின் அமோக ஆதரவால் தங்கல் பாகுபலி 2 பட வசூலை முந்தியுள்ளது. ஆமீர் கான், பாத்திமா சனா ஷேக், சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்த தங்கல் படம் சீனாவில் கடந்த மாதம் ரிலீஸானது. சீன மக்கள் தங்கல் படம் ஓடும் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள் .

உலக அளவில் தங்கல் தற்போது வரை ரூ. 1, 930 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் நிச்சயம் ரூ. 2000 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா வசூலால் உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஆங்கிலம் அல்லாத பட வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளது தங்கல்.

இதுவரை உலக அளவில் 300 மில்லியன் டாலருக்கு-ரூ.1928 கோடி மேல் வசூல் செய்த ஆங்கிலம் அல்லாத படங்கள், சீனாவின் தி மெர்மெய்ட்-533 மில்லியன் டாலர், மான்ஸ்டர் ஹன்ட்-386 மில்லியன் டாலர், பிரான்ஸின் தி இன்டச்சபிள்ஸ் -427 மில்லியன் டாலர் மற்றும் ஜப்பானின் யுவர் நேம்-354 மில்லியன் டாலர் . எது எப்படியோ இந்திய திரைப்படங்கள் அதிக வசூல் சாதனை படைப்பது இதிலும் நமக்கு கொஞ்சம் பெருமைதானே ..!

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!