குதிரை பேர ஆதரங்களுடன் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஸ்டாலின் கோரிக்கை மனு..!

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரி திமுக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு நிலுவையில் இருகின்றது

இந்நிலையில் இன்று சென்னை வந்த ஆளுநரை, கிண்டி ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஸ்டாலின் கோரிக்கை மனுவை அளித்தார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலில் வெளியான குதிரை பேர செய்தியை ஆதாரங்களாக காட்டி ஏற்கனவே பிப்ரவரி 18ம் தேதி தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க ஸ்டாலின் கோரிக்கைவிடுத்தார்.

எனவே ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர்  உத்தரவிடுவாரா.?என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்தால்தான் மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த முடியும் இந்த சிக்கலில் ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்று சந்தேகம் உள்ளது .

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!