இன்றும் கொடுமை தேவதாசி முறை ..! மிட்கப்பட்ட சிறுமி ..!

தேவதாசி முறை பலகாலத்துக்கு முன்னரே ஒழிக்கப்பட்டது என்று நமக்கு நன்கு தெரியும் ஆனால் தற்பொழுது கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் கோயில் பூசாரியால் தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்ட 10 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு .!

இதுகுறித்துப் பேசிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினரும், சமூக சேவகருமான விட்டல் சிக்கானி, 5 வருடங்களுக்கு முன்னர் தலித் சிறுமி தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இந்தத் தகவல் இன்றுதான் எங்களுக்குத் தெரியவந்தது. உடனே அந்தச் சிறுமியை 2 மணி நேரத்துக்குள் மீட்டுள்ளோம் என்றார் .

பெற்றோர்கள் தான் காரணம் ..!

சிறுமியின் பெற்றோரும், கோயில் பூசாரி சரணப்பாவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். பெற்றோர்களிடம் விசாரிக்கும்போது சிறுமி நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து அவர்கள் பூசாரியிடம் விவாதித்தபோது அவரே தேவதாசியாகச் சிறுமியை கோயிலுக்கு நேர்ந்துவிடுங்கள் என்று கூறியதாகவும் தெரிவிக்கின்றனர்.

இளம் வயதில் திருமண சடங்கு ..!

இதனால் பூசாரி சிறுமிக்கு தாலி கட்டி, மற்ற சடங்குகளைச் செய்ததாகவும் கூறினர். பல ஆண்டுகளாக சுமார் 1000 சிறுமிகளை தேவதாசிகளாக மாற்றியுள்ளதை கோயில் பூசாரி ஒப்புக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து கிராமத்தில் இருக்கும் இரண்டு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இதுகுறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை.அவர்களின் கடமையைச் சரியாகச் செய்யாததால் அவர்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் புகார் மனுவில் சேர்த்திருக்கிறமீட்கப்பட்ட சிறுமி அரசு சிறார் இல்லத்தில் சேர்க்கப்படுவார். என்று தெரிவித்துள்ளார் ..!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!