நடிகர் விஜய் கருத்து முதலில் விவசாயிகள் பற்றி யோசிக்கணும் அப்பறம்தான் இந்தியா வல்லரசு .!

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியிருக்கிறார்..

நாம எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற விவசாயிகள் நல்லா இல்லை. இங்கு விருது வாங்கிய கலைஞர்கள் அனைவருக்கும் அது அவங்க உழைப்புக்கு கிடைச்ச பலன். ஆனா எந்த பலனும் கிடைக்காம இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிற விவசாயிகளை நினைத்தால் நெஞ்சம் வலிக்கிறது .

நாம் உணவு, உடை, இருப்பிடம் இப்படி எதுவாக இருந்தாலும் அதில் உணவுக்குத்தான் முதலிடத்தை கொடுக்கிறோம். ஆனால் அதைக் கொடுக்கிற விவசாயிக்கு எதையும் கொடுக்கிறது கிடையாது. பசி ஈசியாக தீர்ந்துவிடுவதால்தான் நாமெல்லாம் அவர்களைப் பற்றி நினைக்கிறது கிடையாதோ என்று சொல்லலாம் .

காசு கொடுத்தால்கூட சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காது என்கிற ஒரு நிலைமை வந்தால்தான் நாமெல்லாம் விவசாயிகள் பற்றி புரிந்துகொள்வோம். ஒரு விவசாயிதான் இலவச அரிசிக்காக ரேஷன்கடையில் வரிசையில் நிற்கிறார்கள் ஒரு விவசாயிதான் ரேஷன்கடையில் வரிசையில் நிற்கிறான் . இந்தியா வல்லரசாகவேண்டும் என்பதெல்லாம் அடுத்ததுதான். முதலில் விவசாயிகள் நன்றாக வாழக்கூடிய நல்ல அரசாக மாறவேண்டும். அப்பொழுதுதான் நாம் எதிர்காலத்தில் கலப்படம் இல்லாத ஆராக்கியமான உணவு உண்டு வாழமுடியும் என்று கூறினார் நடிகர் விஜய்..

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!